12 பார்வையற்ற மாணவர்களும் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வு எழுதிய 12 பார்வையற்ற மாணவர்களும் தேர்ச்சி

Update: 2023-05-08 18:45 GMT

கடலூர் 

கடலூர் மாவட்டத்தில் பார்வையற்ற 12 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்கள் 12 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இது 100 சதவீதம் தேர்ச்சியாகும். இது தவிர காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் 32 பேர் தேர்வு எழுதியதில் 28 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.50 சதவீத தேர்ச்சியாகும். உடல் ஊனமுற்ற மாணவர்கள் 29 பேர் தேர்வு எழுதியதில் 27 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.10 சதவீத தேர்ச்சி ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்