ேகாவில் விழாவில் 12 பவுன் நகை திருட்டு
பரமக்குடி அருகே ேகாவில் விழாவில் 12 பவுன் நகை திருட்டு போனது.;
சத்திரக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி (47) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகளையும், போகலூரைச் சேர்ந்த பொன்னையா மனைவி பொன்னம்மாள் (70) என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் கூட்டத்திற்குள் புகுந்து திருடிச் சென்றனர். இது குறித்து அவர்கள் இருவரும் சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.