சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

பொள்ளாச்சி அருகே சேவல் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-01 21:44 IST

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே சேவல் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேவல் சூதாட்டம்

பொள்ளாச்சி அருகே ஜமீன்காளியாபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக பொள்ளாச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வடக்கிபாளையம் போலீசார் மற்றும் பொள்ளாச்சி போலீசார் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தோட்டம் உள்ள பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் போலீசாரை பார்த்ததும் வாகனங்கள், சேவல்களை போட்டு விட்டு சூதாட்ட கும்பல் தப்பி ஓடியது. அவர்களை போலீசார் நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிப்பட்டவர்களை வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

14 பேர் கைது

விசாரணையில் வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த அங்குசாமி (வயது 54), ரங்கேகவுண்டன்புதூரை சேர்ந்த உதயகுமார் (33), தேகாணியை சேர்ந்த சேட்டு (32), கேரள மாநிலம் வாளையாரை சேர்ந்த சந்தானம் (25), கார்த்திக் (22), விஷ்ணு (22), கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த விக்னேஷ் (32), ரூபன் (25), கோவை ஜி.என்.மில்லை சேர்ந்த வினோத் (28), ராமபட்டிணத்தை சேர்ந்த சிவக்குமார் (42), சிங்கராயம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (50), கோவிந்தனூரை சேர்ந்த பொன்னுச்சாமி (45), ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிசேகர் (30), நெகமத்தை சேர்ந்த ரகுவரன் (28) ஆகிய 14 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் சேவல்களையும், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 30 சேவல்கள், மோட்டார் சைக்கிள், கார், சரக்கு ஆட்டோ உள்பட 36 வாகனங்களும், ரூ.13 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்