சென்னையில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,456 டன் யூரியா உரம் வந்தது

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1456 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் லாரிகள் மூலம் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

Update: 2022-09-22 19:00 GMT

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1456 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் லாரிகள் மூலம் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

1456 டன் உரம் வந்தது

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்து இருப்பதால் விவசாய சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்களை போதுமான அளவில் வழங்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மணலியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,456.2 டன் யூரியா உரங்கள் வந்தது. இந்த உரங்களை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் மேற்பார்வையில் நடைபெற்றது.

நேரில் ஆய்வு

இந்த பணியை தர்மபுரி தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் ருத்திரமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 510.75 டன் யூரியா உரமும், கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 711.45. டன் யூரியா உரமும் பிரித்து அனுப்பப்பட்டன. இதேபோல் சேலம் மாவட்ட உரக்கடைகளுக்கு 234 டன் யூரியா உரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வின்போது விற்பனை அலுவலர் மேகநாதன் உடனிருந்தார். விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியா உரம் பெற்று பயனடையுமாறு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்