15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது-போக்சோ வழக்கில் அத்தை மகன் கைது

15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் போக்சோ வழக்கில் சிறுமியின் அத்தை மகன் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-24 00:35 IST

அருப்புக்கோட்டை

15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் போக்சோ வழக்கில் சிறுமியின் அத்தை மகன் கைது செய்யப்பட்டார்.

கர்ப்பம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவரது அத்தை மகன் இளங்கோவன்(வயது 24) காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியை அருப்புக்கோட்டை கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தது

15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், இதுகுறித்து அருப்புக்கோட்டை யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சந்தனமாரி, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த சிறுமியுடன் இளங்கோவன் அடிக்கடி தனிமையில் இருந்ததும், இதில் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது.

கைது

இதுகுறித்து சந்தனமாரி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்