18 கிளிகள் வனப்பகுதியில் விடப்பட்டன

பொதுமக்களிடம் இருந்து மீட்கப்பட்ட 18 கிளிகள் வனப்பகுதியில் விடப்பட்டன.

Update: 2023-07-17 18:45 GMT

ராமநாதபுரம், 

தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2-ல் உள்ள பச்சை கிளிகளை பாதுகாக்கும் பொருட்டு வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. மேலும் வீடுகளில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் சிறை தண்டணை வழங்கிடவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதிலும் வனத்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடுகளில் கிளிகளை வளர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் கடந்த 30-ந் தேதிக்குள் தானாக முன்வந்து அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்ட 10 கிளிகளை ஏற்கனவே ஒப்படைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீடுகளில் வளர்க்கப்பட்ட 18 கிளிகளை நேற்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலகத்திற்கு 18 கிளிகள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தலைமையில் வனத்துறையினர் வனப்பகுதியில் பறக்கவிட்டனர். இந்த நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலர்கள் நித்திய கல்யாணி, நாகராஜன், ராஜசேகரன், அருண்குமார் மற்றும் வன பாதுகாப்பு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்