190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது
கோவையில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரைகைது செய்தனர்.;
கோவையில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரைகைது செய்தனர்.
190 கிலோ புகையிலை பொருட்கள்
கோவை-சத்தி மெயின் ரோட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதனை தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திர சேகர் (வயது 44), பிரதீப்குமார் (21), அழகுபாண்டி (44) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்
கைது
இதேபோல் பாப்பநாயக்கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 பாக்கெட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் (21), அண்ணதுரை (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.