கஞ்சா விற்ற 2 பேர் கைது

களக்காடு அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-17 00:58 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படலையார்குளம் விலக்கு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் களக்காடு ஜெ.ஜெ நகரை சேர்ந்த வினோத் (வயது 23), தெற்கு வள்ளியூரை சேர்ந்த நவின் (26) என்பதும், இருவரையும் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்‌.

Tags:    

மேலும் செய்திகள்