கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-12-26 20:40 IST

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அவர் அம்மாவட்டத்தின் வீரசோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கள்ளக்குறிச்சி வருகையையொட்டி விழா நடைபெற்ற பகுதியில் திமுக சார்பில் வாழைத்தார்கள், கரும்புகள், இளநீர் மற்றும் பழங்களை கொண்டு அலங்கார வரவேற்பு தோரணம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்தப்பின் அங்கு கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணத்தில் இருந்து வாழைத்தார்கள், கரும்புகள், இளநீர் மற்றும் பழங்களை பொதுமக்களும், கட்சித்தொண்டர்களும் எடுத்து சென்றனர். போட்டிபோட்டுக்கொண்டு வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்