கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு

நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

Update: 2022-07-02 00:23 GMT

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள காபி கடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்தி திடீர் சோதனையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 2 நபர்களிடம் இருந்து 7 கிலோ எடை அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்