ஆடுகள் திருடிய 2 பேர் கைது

பிள்ளைவன ஊருணி அருகே காரில் வந்த 3 பேர் ஆடுகளை திருடிய 3 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-23 00:15 IST

சிவகங்கை அடுத்த பாகனேரி பகுதியில் சமீபகாலமாக ஆடுகள் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிள்ளைவன ஊருணி அருகே காரில் வந்த 3 பேர் ஆடுகளை காரில் கடத்தி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் காரை மடக்கினர். இதையடுத்து காரில் இருந்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் சிக்கினர்.

இதுகுறித்து மதகுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்