மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வாணாபுரம்
பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இளையனார்குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன்(வயது38), சின்னக்கொள்ளியூரை சேர்ந்த முனுசாமி(58) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.