கோவிலில் திருடிய 2 பேர் கைது

சிறுத்தொண்டநல்லூரில் கோவிலில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-08-07 17:41 IST

ஏரல்:

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பலவேசக்காரன் சாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று 4 குத்து விளக்குகளை திருடி சென்றனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் அவர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி மகன் பலவேசம் முத்து (வயது 47) கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஜெயசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கோவிலில் திருடிய சின்ன நட்டாத்தி செந்தூர்பாண்டி மகன் முத்துவேல்(27), அதே ஊரைச் சேர்ந்த முத்தாரம்மன் கோவில் தெரு சுயம்புலிங்கம் மகன் மாரிமுத்து (25) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 குத்துவிளக்கு மீட்கப்பட்டது மேலும் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்