லாட்டரி விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க. கவுன்சிலரை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர்.;
அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவுத்தாய், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அம்மையநாயக்கனூர், கொடைரோடு பகுதியில் லாட்டரிச்சீட்டு விற்று கொண்டிருந்த அம்மையநாயக்கனூரை சேர்ந்த ராம்குமார் (வயது 30), சிவா (48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரை கண்டதும் லாட்டரி விற்று கொண்டிருந்த ராமலிங்கம், முகமது நசீர் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். தப்பி ஓடிய முகமது நசீர், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.