காட்டுக்குள் வேட்டையாட சென்ற 2 பேர் கைது

காரையூர் அருகே காட்டுக்குள் வேட்டையாட சென்ற உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-19 00:26 IST

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்படி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரையூர் அருகே மறவாமதுரை வெட்டுதலைகாட்டுப்பகுதியில் திருச்சி மாவட்டம், சுப்புராயபட்டியை சேர்ந்த சின்னு மகன் சுப்பையா (வயது 42), அதே ஊரைச்சேர்ந்த பாண்டியன் மகன் பழனிவேல் (26) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் காட்டுக்குள் வேட்டையாட சென்றதும், அவர்களிடம் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியும் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்