2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாலிபரை கைது செய்தனர்.;

Update:2022-10-28 00:30 IST

2½ டன் ரேஷன்அரிசி

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, சட்ட விரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல்-துறையூர் சாலை என்.கொசவம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவுடன் 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதை தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது30) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர்கள் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து, வடமாநில தொழிலாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்