2 பெண்கள் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்ததாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;
அன்னதானப்பட்டி:-
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று சீலநாயக்கன்பட்டி சின்னுசாமிநகர் பைபாஸ் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சிலர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராணி (வயது 50), அபிராமி (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 25 வயது இளம்பெண் ஒருவரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.