லாரி மோதி தொழிலாளி பலி:டிரைவருக்கு 2 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

Update:2023-07-07 02:11 IST

சேலம்

சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் விஜய் (வயது 20). தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நெத்திமேடு பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேலம் பாரப்பட்டியை சேர்ந்த தனபால் (45) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி லாரி டிரைவர் தனபாலுக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்