ஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசு தலைவர்-பிரதமரை நாளை நேரில் அதிமுக எம்.பி-க்கள் சந்திப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நாளை நேரில் அதிமுக எம்.பி-க்கள் சந்திக்கிறார்கள்.

Update: 2017-01-18 09:38 GMT

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க கோரியும்,  தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைதொடர்ந்து நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போராட்டங்கள் தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக  முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமை செயலகத்தில்   டிஜிபி ராஜேந்ந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்  ஜார்ஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

நாளை அ.தி.மு.க எம்பி.க்கள் 50 பேர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லி செல்கிறார்கள்.  ஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நாளை நேரில் அதிமுக எம்.பி-க்கள் சந்திக்கிறார்கள்.

மேலும் செய்திகள்