விவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்

விவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்சனை என தமிழிசை சவுந்தரராஜன் பேசிஉள்ளார்.

Update: 2017-03-28 08:02 GMT
சென்னை,

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக 15-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் வாய்களில் உயிருள்ள எலிகளை கவ்விப் பிடித்து நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  

நேற்று போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில்  இன்று போராடும் விவசாயிகள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள். விவசாயிகள் மாலை 4 மணிக்கு மத்திய வேளாண்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்திக்கிறார்கள். தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதி உள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறிஉள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது. விவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்னை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்