அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மு.க.ஸ்டாலினுடன் மீண்டும் சந்திப்பு நன்றி தெரிவித்தனர்

பேரறிவாளன் பரோல் தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பிய ஸ்டாலினுக்கு, எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Update: 2017-06-24 08:06 GMT
சென்னை

தமிழக சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய  அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும் விவகாரத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். பேரறிவாளனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று பேரறிவாளன் பரோல் விவகாரத்தை சட்டசபையில் எழுப்பி மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சட்டசபைக்குள் அவர்கள் இன்றும் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்று பேசியதற்காக நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்