அ.தி.மு.க.வின் 3 அணிகளும் 420 தான் ஜெ.அன்பழகன் தாக்கு

அ.தி.மு.க.வின் 3 அணிகளும் 420 தான் முதலிடம் யாருக்கு என்பதில் தான் போட்டி என ஜெ.அன்பழகன் கூறினார்.

Update: 2017-08-12 07:21 GMT
சென்னை,

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து 420 என்கிறார். எடப்பாடி பழனிசாமி டி.டி.வி.தினகரனை 420 என்கிறார். இவர்களை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 420 என்கிறார்கள். மொத்தத்தில் அ.தி. மு.க.வில் உள்ள 3 அணியுமே 420 தான்.அ.தி.மு.க.வில் நம்பர்-1 420 யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது.

இந்த ஆட்சி மீது தேவைப்பட்டால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று தான் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி 
இருக்கிறார். எனவே உடனே கொண்டு வருவதாக அர்த்தம் இல்லை.

நடிகர் கமல்ஹாசன் உதவியுடன் தி.மு.க. இதை செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக கேட்கிறீர்களே? இதில் கமல்ஹாசனுக்கு என்ன வேலை? நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் கமலுக்கும் சம்பந்தம் இல்லை. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள்தான் பங்கேற்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்