தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை

தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.

Update: 2017-10-13 10:43 GMT
சென்னை

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து தமிழக அரசு  மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. 2017 அக்டோபர் 12 ந்தேதி வரை டெங்கு உயிரிழப்புகள்  குறித்து அதில் கூறிப்பட்டு உள்ளது. 

அதில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் அதிகபட்சமாக 1178 பேருக்கு டெங்கு பாதிப்பு

* டெங்கு காய்ச்சலால் சென்னை-1,138 பேர், சங்கரன்கோவில்-1,072 பேர் பாதிப்பு.  தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு  ஏற்பட்டு உள்ளது.

* தூத்துக்குடி, சங்கரன் கோவில், சென்னை, திருச்சி  ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

* டெங்கு காய்ச்சலால் கோவை-942 பேர், திருப்பூர்-782 பேர், கன்னியாகுமரி-777 பேர் பாதிப்பு.

மேலும் செய்திகள்