தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம்

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார். #Tamilnews

Update: 2018-02-22 14:14 GMT
சென்னை,

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக  சத்யபிரதா சாஹு நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு பதில் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சத்யபிரதா சாஹு  1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் . சத்யபிரதா சாஹு தற்போது சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு வேறொரு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்