தமிழக பட்ஜெட் : ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது -ஓ.பன்னீர் செல்வம்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #TNBudget2018 #GST

Update: 2018-03-15 07:49 GMT
சென்னை

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள  அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்  இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்  வருமாறு:-

* மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும். 

* ரூ. 13 கோடி செலவில் 2000 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்க அனுமதி அளிக்கப்படும்.

* சென்னை விரிவாக்க பகுதிகளில் ரூ.614.84 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்.

* கதர் துறைக்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு.

* இலங்கைத் தமிழ் அகதிகளின் நல திட்டங்களுக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு. 

* ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

மேலும் செய்திகள்