பெசன்ட் நகர் இல்லத்திற்கு நடராஜன் உடல் கொண்டு வரப்பட்டது

மறைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் உடல் பெசன்ட் நகர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. #Natarajan

Update: 2018-03-20 00:27 GMT
சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன் (74).  இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

 பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

இந்தநிலையில்  மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.  நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்தது. நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எம்பார்மிங் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்திற்கு நடராஜன் உடல் கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.  அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகர் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படும்.  அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்