தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது என கொடைக்கானல் மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-05-19 08:32 GMT
கொடைக்கானல், 

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.1485 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொடைக்கானல் மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் பழனிசாமி பேசும் போது கூறியதாவது:- 

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது. சிறுமலையை சுற்றுலாதலமாக மாற்ற பரிசீலனை நடைபெறுகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்