ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது - ஜெயக்குமார்

ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். #SterliteProtest;

Update:2018-05-22 19:37 IST

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனைக்குரிய விஷயம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது, தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் விரிவான விசாரணை மேற்கொள்ளும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திமுக ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்