தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்

தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் என்று திருமாவளவன் குற்றசாட்டியுள்ளாா். #NarendraModi #Thirumavalavan #BJP;

Update:2018-05-26 11:08 IST
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,

“தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார்”, என்றும்  அனைத்து தரப்பிலும் விமர்சிக்கப்பட்ட ஆட்சி மத்திய பாஜக ஆட்சி என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளாா்.

மேலும், தூத்துக்குடி விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பனையும் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில் தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும் . இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்