கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு கருத்து: முகாந்திரம் இருந்தால் எச்.ராஜா மீது வழக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி எம்.பி. ஆகியோர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Update: 2018-05-31 20:42 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி எம்.பி. ஆகியோர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து எச்.ராஜா மீது, சென்னை நொளம்பூர் போலீசில் குகேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம். முகாந்திரம் இல்லை என்றால், புகாரை முடித்து வைத்து, அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்