பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். #DMK #MKStain #ADMK #BJP

Update: 2018-07-21 05:35 GMT
புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது முதன் முதலாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்த, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. வாக்கெடுப்பில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக 126 உறுப்பினர்களும், ஆதரவாக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியான அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. 

பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து தி.மு.க செயல்தலைவர்  ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்து உள்ளார். 

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு, 15- வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்திற்கும் அ.தி.மு.க அரசு எதற்காக அடிபணிந்தது என்பது,  தற்போது பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்