மாநில செய்திகள்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேர் மீதும் குண்டர் சட்டம்

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை,

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது. சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம் 60 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 60 வயது முதியவருக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
2. பள்ளிபாளையத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வியாபாரி கைது
பள்ளிபாளையத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
3. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 12 ஆண்டு சிறை
விருத்தாசலம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
4. சிறுமி பாலியல் பலாத்காரம்: பார்த்திபன், விவேக், கஸ்தூரி கண்டனம்
சிறுமியை பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு நடிகர்கள் பார்த்திபன், விவேக், நடிகை கஸ்தூரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.