மாநில செய்திகள்
தீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்து இறக்கியபோது விபத்து : 3 பேர் உயிரிழப்பு

தீபாவளி விற்பனைக்காக பட்டாசு பண்டல்களை கொண்டுவந்து இறக்கியபோது பட்டாசு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒரு விற்பனையாளர் பட்டாசு பண்டல்களை  கொள்முதல் செய்து இன்று வீட்டில் இறக்கிக்கொண்டிருந்தார். வாகனங்களில் இருந்து இறக்கப்பட்ட பட்டாசு பண்டல்களில் ஒரு பண்டல் திடீரென வெடித்துச் சிதறியது.

பின்னர் மற்ற பண்டல்களும் வெடிக்க அந்த இடமே கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பட்டாசுகள் வெடித்ததில் 8 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.