7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பு என்று துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Update: 2018-09-21 16:21 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ராஜபக்சேவே இந்திய அரசு உதவியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்; அதற்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப்படுகிறது.  அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, எம்எல்ஏ சண்முகநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

ஹெச்.ராஜா என்ன மன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை, அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை.  7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் பொறுப்பு.

வைகோ புகாருக்கு பதில் அளித்த பன்னீர் செல்வம்.  ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முறைப்படியான ஆணைகளை தான் வழங்கி உள்ளது. புஷ்கரம் விழா சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து ஆலோசிக்கப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்