தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்: ‘‘டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன்’’ - கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு

தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன் என கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2018-11-06 19:31 GMT
சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தில் டாக்டர் ராமதாசை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழி பெயர்ப்பை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்