‘சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?

‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-11-08 23:45 GMT
சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்-அமைச்சராகவும், ராதாரவி அமைச்சராகவும் வருகிறார்கள். பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவள்ளி என்று உள்ளது. இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் என்று கூறுகின்றனர்.

அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மெத்தனமாக செயல்படுவதாக விஜய் சாடும் வசனம் உள்ளது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சிக்கும் வசனமும் உள்ளது.

நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்துத்தான் பணம் பார்க்கிறோம். அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று முதல்-அமைச்சர் சொல்வதுபோல் வசனம் உள்ளன.

கந்து வட்டியால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த உண்மை சம்பவம், கன்டெய்னரில் பணம் பதுக்கும் காட்சிகளும் உள்ளன. அரசு வழங்கிய இலவச பொருட்களை ஏ.ஆர்.முருகதாஸ் தீயில் அள்ளிப்போட்டு கொளுத்துவது போன்றும் காட்சிகள் இருக்கிறது. கள்ள ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர துடிக்கும் அரசியல் கட்சி அந்த கட்சிக்கு எதிராக அனைத்து தொகுதிகளிலும் சமூக சேவைகளில் ஈடுபடுவோரை சுயேச்சைகளாக வெவ்வேறு சின்னங்களில் நிறுத்தி ஜெயிக்க வைத்து ஆட்சியை பிடிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.

இதன் காரணமாகவே அமைச்சர்களும், அ.தி.மு.க தொண்டர்களும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்