‘கஜா’ புயலால் மோசமான வானிலை: மதுரை, தூத்துக்குடி விமானங்கள் ரத்து

‘கஜா’ புயல் காரணமாக மோசமான வானிலையால் சென்னையில் இருந்து மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2018-11-16 21:15 GMT
ஆலந்தூர்,

‘கஜா’ புயல் காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் வானிலை மிக மோசமாக இருந்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு 58 பயணிகளுடன் திருச்சிக்கு சென்ற விமானம், அங்கு தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. திருச்சியில் வானிலை சீரானதும் காலை 11 மணிக்கு அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

அதேபோல் திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் வானிலை மோசமாக இருந்ததால் மாலை 3.25 மணிக்கு 48 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6 மணிக்கு 60 பயணிகளுடன் செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் காலை 10.20 மணிக்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 7.55 மணிக்கு 58 பயணிகளுடன் செல்ல வேண்டிய விமா னம் பகல் 12 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. மேலும் மதுரைக்கு காலை 8 மணி மற்றும் பகல் 12.50 மணிக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மதுரைக்கு காலை 11.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு காலை 11.50 மணிக்கு செல்வதற்கு பதிலாக 12.50 மணிக்கும், பகல் 12.05 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் பகல் 2.35 மணிக்கும் புறப்பட்டு சென்றன.

தென்மாவட்டங்களில் காலை 10 மணிக்கு பின்னர் வானிலை சீரானதும் விமான போக்குவரத்து சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தாமதம் காரணமாக பயணிகள் கடும் சிர மத்துக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்