பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது.

Update: 2018-11-21 02:03 GMT
சென்னை, 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.31 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் சென்னையில் விற்பனையாகிறது. அதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.79.31 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.31 ஆகவும் விற்பனையாகிறது. 

மேலும் செய்திகள்