5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணம் இல்லை: முதல் அமைச்சர் அறிவிப்பு

5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணம் இல்லை என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-11-30 07:16 GMT
சென்னை, 

முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த புதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.58 கோடி குடும்பத்தினர் பயன் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார். 

மேலும் செய்திகள்