ஜெயலலிதா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்கள் தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அரிய தகவல்கள்

தந்தி டி.வி.யில் கடந்த திங்கட்கிழமை முதல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற புதிய தொடரில், ஜெயலலிதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத பல புதிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

Update: 2018-12-06 23:30 GMT
4-வது நாளான நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததா? குழந்தை சர்ச்சை உருவாக காரணம் என்ன? என்பன போன்ற பல புதிய தகவல்கள் இடம்பெற்றன.

5-வது நாள் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பாகிறது.

“எனக்கு குடும்பம் கிடையாது”-இது அரசியல் அரங்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி வலியுறுத்திச் சொன்னது. ஆனால் மிக நீண்ட ஆண்டுகள் தாத்தா பாட்டி, மாமா, சித்திகள், அண்ணன், தங்கைகள் உடன் வாழ நீடித்த அவரது கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அழகிய பக்கங்களை வெளிக்கொண்டு வருகிறது இன்று இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சி.

ஜெயலலிதாவின் ஆட்சி பீடமாக மாறி, அ.தி.மு.க.வினர் வழிபட்ட போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லம் உருவாகி எழுந்தது, போயஸ் இல்ல புதுமனை புகுவிழாவில் நடந்த உலகறியாத சுவாரசியங்களை இன்றைய நிகழ்ச்சியில் உருக்கத்தோடு பகிர்ந்து கொள்கின்றனர் ஜெயலலிதாவோடு வாழ்ந்த அவரது ரத்த சொந்தங்கள்.

ஜெயலலிதாவுக்கு ஏற்பாடான திருமணத்தை பற்றி முதன் முறையாக அவர்கள் மனம் திறந்து உள்ளனர்.

அரசியலில் நுழையும் முன் ஜெயலலிதாவுக்கு இருந்த குழப்பங்களை பற்றியும், அரசியலில் நுழைந்து அவர் அ.தி.மு.க.வின் ‘அம்மா’வாக மாற, குடும்ப உறுப்பினர்கள் அவர்களது ‘அம்மு’வை பிரிந்த கதையையும் உருக்கமாக கூறுகின்றனர் ஜெயலலிதாவின் உறவினர்கள்.

குடும்பத்தோடு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரிவுக்கான காரணிகளை பற்றி முதன் முறையாக அவர்கள் மவுனம் கலைத்து உள்ளனர்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த துயரத்தை கண்ணீர் மல்க இன்றைய நிகழ்ச்சியில் ஜெயலலிதா குடும்பத்தினர் பகிர்ந்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகிறது.

மேலும் செய்திகள்