அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ

அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-10 11:32 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.  இந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளன.

இந்த நிலையில், சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன என தகவல் வெளியானது.  இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  சிறப்பு காட்சி ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தொடர்ந்து, அனுமதியின்றி சிறப்பு காட்சிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இதேபோன்று, தியேட்டர்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்