பெண்ணிடம் சில்மிஷம்: ரத்த பரிசோதகருக்கு பொதுமக்கள் தர்ம அடி

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ரத்த பரிசோதகருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2019-01-13 12:35 GMT
சென்னை,

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ரத்த பரிசோதகருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். குழந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக பெண் ஒருவர், சிகிச்சைக்கு வந்துள்ளார். குழந்தைக்கு ரத்த பரிசோதனை முடித்த பிறகு அந்த பெண்ணிடம் ரத்த பரிசோதகர் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூறிய புகாரை தொடர்ந்து ரத்த பரிசோதகர் லோகநாதனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதைத் தொடர்ந்து, புகாரின் பேரில் ஒப்பந்த பணியாளரான லோகநாதன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்