கோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம்? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

Update: 2019-01-13 19:00 GMT
ஆலந்தூர்,

விருதுநகரில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசிய மோடி, டெல்லியில் இருந்து எப்படி விருதுநகருக்கு போனீர்கள்?. சுறுசுறுப்பு தலைவர் என்று என்னை கூறியது எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மோடியின் நெருப்பு பேச்சு, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும்.

கவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு உள்ளார். மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் கொடுத்து நல்லது செய்த கவர்னருக்கு கருப்பு கொடியை காட்டிவிட்டு இப்போது அதே கவர்னரை சந்திக்கப்போவதாக சொல்கிறார். கவர்னர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்து உள்ளது. இனி அவருக்கு கருப்பு கொடி காட்ட மாட்டார் என நம்புகிறோம்.

கோடநாடு விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என முதல்-அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அந்த குற்றச்சாட்டு உண்மையா?, பொய்யா? என தெரியாத நிலையில் அதற்குள் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை. ஆட்சி கிடைத்துவிடாதா? என்று அவசரப்படுகிறார். எதற்கும் அவசரப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்