11 புதிய தொழிற்சாலைகள், வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி

11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-01-18 09:25 GMT
சென்னை:
 
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விமான உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சரவையில் இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்