தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான அனைத்து சூழலையும் அதிமுக அரசு உருவாக்கியுள்ளது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தொழில் தொடங்க சாதகமான மாநிலங்கள் பட்டியலில், 6-ம் இடத்தில் இருந்து 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-01-28 11:16 GMT
சென்னை,

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கண்ணாடி உற்பத்தி ஆலையின் 3-வது யூனிட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

"இதுவரை 3400 கோடி ரூபாயை செயின்ட் கோபெயின் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான அனைத்து சூழலையும் அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் புத்தாக்க கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க ஏதுவான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் தொடங்க சாதகமான மாநிலங்கள் பட்டியலில்,  6-ம் இடத்தில் இருந்து 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது.

திருத்தப்பட்ட சூரியசக்தி தொழிலுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும். முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.50 லட்சத்துக்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" என கூறினார்.

மேலும் செய்திகள்