50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து - தமிழக அரசின் அரசாணை ரத்து

50% சிறுபான்மையின மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை ரத்து என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-01-30 06:29 GMT
சென்னை

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு நிரப்பினால் மட்டுமே சிறுபான்மை அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி  140 கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கில் 50 சதவீத  சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்.

தகுதியான சிறுபான்மை மாணவர்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு எதிராக தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்