அதிமுக- பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புகள் உள்ளன: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2019-02-20 03:38 GMT
சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- “அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்” என்றார். 

மேலும் செய்திகள்