பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.25 ஆக விற்பனையாகிறது.

Update: 2019-03-11 00:45 GMT
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள்  கடைபிடித்து வருகின்றன. 

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.27 காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்