அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் : மு.க. ஸ்டாலின் கண்டனம்

பொள்ளாச்சி விவகாரத்தில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்ற சம்பவத்திற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-14 14:07 GMT
பொள்ளாச்சி விவகாரத்தில்  அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்ற சம்பவத்திற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெண்ணின் அடையாளத்தை போலீஸ் எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.   வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதனை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. 

வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் வெளியிடப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.  பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியே விடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்