தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரிகளுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையை சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “சட்டவிரோதமாக தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Update: 2019-03-15 20:30 GMT
மதுரை, 

மதுரையை சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “சட்டவிரோதமாக தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மண் அள்ள அனுமதி வாங்கிவிட்டு, ஆற்று மணல் கடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று காளஸ்வரன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் செயல்படும் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “தாமிரபரணி ஆற்றில் எந்த குவாரிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ள போதும், மீண்டும் எவ்வாறு குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டதுடன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடுமணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும் நீதிபதிகள் தடை விதித்தனர்.

மேலும் செய்திகள்